Wednesday, April 4, 2012

உடல் சூடு மற்றும் நரை முடிக்கு மருதாணி




 கோடை வெயில் ஆரம்பித்து விட்டது , உடல் சூடும் மண்டை சூடு எல்லாமே அதிகமாகும், கொப்புளங்கள்,கட்டிகள் ,தோல் சம்பந்தப்பட்ட வியாதிகள். கண் எரிச்சல்.போன்றவை வர வாய்ப்பிருக்கு. உடல் சூடும் மண்டை சூடு எல்லாமே அதிகமாகும். அதற்கு தலைக்கு மெகந்தி போட்டுகொள்ளலாம். அல்லது தலைக்கு ஆயில் மசாஜ் செய்து குளிக்கலாம்.

வெயிலினால் ஏற்படும் சூட்டை தணிக்க ஆண்களும், பெண்களும் மருதாணி தலைக்கு தேய்த்து குளிப்பது நல்லது.
மெகந்தி தேய்த்து குளிப்பதனால் நல்ல குளிர்ச்சி ஏற்பட்டு உடல் சூட்டை தணித்து குளு குளுன்னு வைக்கும். சிலருக்கு தலைக்கு மெகந்தி போட்டால் ஒத்துக்காது.தலை வலி ஜலதோஷம் பிடித்து கொள்ளும். அதற்கு கிராம்பை சேர்த்து கொள்ளலாம்.

சிலர்  கொஞ்சம் வெள்ளை முடி தோன்றினாலே சில பேர் பத்து முறை கண்ணடியை பார்ப்பார்கள். அய்யோ நாம் கிழவியா(கிழவனா) விட்டோமே என்று தோனும்.யாரும் கிழவி கிடையாது மனதள‌வில் எல்லோரும் என்றும்ம் பதினாறு தான்.
 சிலருக்கு இளநரையும் வருவதுண்டு. அதற்கு மருதாணி தலைக்கு போட்டு கொள்வது நல்லது.






 மெகந்தி கலவை : மருதாணி பொடி, தயிர், திக்கான டீ டிகாஷன்,
(கருவேப்பிலை, வேப்பிலை சிறிது கரிசலாங்கண்ணி கீரை,பாசி பயிறு) இதேல்லாம் காயவைத்து திரித்து வைத்து கொள்ளுங்கள்.
இதை மேலே குறிப்பிட்டுள்ள மெகந்தி கலவையில் கொஞ்சம் சேர்த்து கொள்ளுங்கள்.இப்போது அனைத்தையும் நல்ல இட்லி மாவு பதத்திற்கு கரைத்து ஒரு இரும்பு வானலியில் வைத்து இரவு முழுவதும் ஊறவிட்டு, காலையில் தலையில் தேய்த்து 20 நிமிடம் (அ) 30 நிமிடம் ஊறவைத்து குளிக்கவும்.
இந்த கலவையை ஆறு மணி நேரம் தலையில் வைத்து ஊறவைத்து தேய்த்தால் நன்கு பலன் கிடைக்கும் என்று கேள்வி பட்டேன்.
உடம்புக்கு ஒத்து கொள்ளாதவர்கள், 1 மணி நேரம் முன் தலையில் தடவி ஊறவைத்து குளிக்கவும்.

பீட்ரூட் சாறு எடுத்தும் தலையில் தேய்த்து ஊற வைத்து குளிக்கலாம்.

நல்லெண்ணை அடிக்கடி தேய்த்து எண்ணை குளியல் போட்டாலும் நரை முடி வருவதை தவிர்க்கலாம்.
உடல் சூட்டையும் தணிக்கும். ஒரு நாள் விட்டு ஒரு நாள் ந‌ல்லெண்ணை தேய்த்து மசாஜ் செய்து குளித்தால் கூட‌ இள‌ந‌ரை வ‌ர‌ம‌ல் இருக்கும்.

 செடிக்கு எப்படி தண்ணீர் ஊற்றி வளர்க்கிறோமோ அப்படி தான் முடிக்கும். நல்ல நிறைய எண்ணை தலையில் தேய்த்து மசாஜ் செய்து வாரம் இருமுறை குளித்தால் முடியும் வளரும். நல்ல ஷைனிங்கும் கிடைக்கும்.முடி செம்பட்டையாகமல் இருக்கும்
கருவேப்பிலை உணவில் அதிக அளவில் சேர்த்து வரவும்.
கொசுறு கருவேப்பிலை இந்த பதிவையும் பார்க்கவும்.

கருவேப்பிலை பொடி , அரைத்து விட்ட கருவேப்பிலை ரச்ம் இது போல் உணவு அதிக அளவில் சேர்த்து கொண்டால் தலை முடி கருகருவென வளரும் நரை முடியும் வருவதையும் தவிர்க்கலாம்.






10 கருத்துகள்:

Asiya Omar said...

நல்ல பகிர்வு ஜலீலா.

நட்புடன் ஜமால் said...

:)

Very nice and useful, sariyana nerathil - nandringo ...

சாந்தி மாரியப்பன் said...

வெய்யிலுக்கேத்த நல்ல குறிப்பு ஜலிலாக்கா.. ஆறு மணி நேரமெல்லாம் ரொம்பவே கூடுதல். ஒண்ணு இல்லைன்னா ஒண்ணரை மணி நேரமே போதுமாம்.

வெங்கட் நாகராஜ் said...

இங்கே மருதாணி போட்டுக்கொள்ளும் ஆட்கள் அதிகம்..... செம்பட்டை கலர் தலையர்களை நிறைய பார்க்கலாம்! :)))

Menaga Sathia said...

பயனுள்ள பகிர்வு!!

கோமதி அரசு said...

நல்ல குறிப்புகள் ஜலீலா நன்றி.

திண்டுக்கல் தனபாலன் said...

பயனுள்ள பதிவு ! நன்றி !

ஸாதிகா said...

அருமையான குறிப்புகள் ஜலி.

Anonymous said...

பயனுள்ள குறிப்புகள் நன்றி

Akila said...

Romba nalla payanulla kurippugal... Mikka nandri...

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா