Wednesday, March 14, 2018

முழு பாசி பயிறு குதிரைவாலி பொங்கல் - whole moong dal barnyard millet pongal


( வீடியோ வாக எடுத்தததால் மெயின் பிச்சர் சரியாக வரவில்லை,)



My You tube channel please visit and like , comment, subscribe and share with your friends/
மேலே உள்ள லின்க் என் யுடியுப் சேனல் யார் யார் பார்க்கிறீங்கன்னு தெரியல என் சேனல் ஓப்பன் செய்ததும் பக்கத்தில் சிவப்பு கலரில் சப்ஸ்கிரைப்ன்னு இருக்கும் அதை கிளிக் செய்து சப்ஸ்கிரைப் செய்து விட்டு அதற்கு பக்கத்தில் இருக்கும் பெல் பட்டனையும் கிளிக் பண்ணிடுங்கள். இப்படி செய்தால் நான் போடும் பதிவுகள் உடனுக்குடன் உங்களுக்கு கிடைக்கும்.

Please Subscribe My Channel and like, comment and share with your friends





மறக்காம சப்ஸ்கிரைப் பண்ணுங்கள் , எப்படி இருக்கு சரியா பேசி இருக்கேனான்னும் தெரியல , சில பேர் என் குரல் மெதுவாக இருக்கு என்று சொல்கிறார்கள், எனக்கு கேட்டா கரெக்டா இருக்கமாதிரி தான் தெரியுது.
நீங்க பார்த்து கமெண்டில் நிறை குறைகளை சொன்னால் தான் எனக்கு சரி செய்து கொள்ள முடியும்.

தொடர்ந்து இந்த பிலாக்குக்கு வருகைதந்து ஆதரளித்தது போல என் சேனலுக்கும் தொடர்ந்து வந்து லைக் , கமென்ட் , சப்ஸ்கிரைப் செய்து ஆதரவளிக்குமாறு கேட்டு கொள்கிறேன்.
==========================================***
மறந்து போன பழங்காலத்து சிறு தாணிய வகைகள் மீண்டும் இப்போது அனைவரும் பயன் படுத்த ஆரம்பித்து உள்ளனர். ரொம்ப நல்ல விஷியம், அரிசி உணவை தவிர்த்து , குதிரை வாலி, சாமை, வரகரிசி, தினை, கம்பு, கேழ்வரகு என்று பயன் படுத்தினால் சர்க்கரை வியாதி, கேன்சர் வியாதி, ஹார்ட் பிராப்ளம் போன்ற பல வியாதிகளில் இருந்து நம்மை காத்துக்கொள்ளலாம்.
இதில் நான் பயன் படுத்தி இருப்பது குதிரைவாலி Kuthirai vaali என்ற தாணியம், அந்த அளவுக்கு அரிசிக்கும் இதற்கும் பெரிய வித்தியாசம் தெரியவில்லை மிகவும் நன்றாக இருந்தது.
மஞ்சள் பாசி பருப்பு சேர்ப்பதை விட கொஞ்சம் ஹெல்தியாக முழு பாசி பயிறு சேர்த்து பாருங்கள் இன்னும் சுவை அதிகமாக இருக்கும்.

இதில் பொங்கல் போல பல காய்களைபயன் படுத்தியும் செய்யலாம்.


மேலே உள்ள சுட்டியை கிளிக் செய்யவும் வீடியோவாக பார்க்கலாம்.


தேவையான பொருட்கள்
குதிரை வாலி அரிசி + பாஸ்மதி அரிசி - முக்கால் டம்ளர்
முழு பாசி பருப்பு - கால் டம்ளர்
உப்பு - தேவைக்கு
தாளிக்க
எண்ணை + நெய் - 4 தேக்கரண்டி
மிளகு - ஒரு தேக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி பொடியாக
அரிந்த பச்சமிளகாய் - ஒரு தேக்கரண்டி துருவிய
இஞ்சி - அரை தேக்கரண்டி பொடியாக அரிந்து
வறுத்த முந்திரி - ஒரு மேசைகரண்டி
கருவேப்பிலை - 5, 6 இதழ்
செய்முறை 

முழுபாசிபயிறை இரவே. அல்லது8 மணிநேரம் ஊற வைக்கவும்.
முழுபாசி பருப்பு மற்றும் குதிரை வாலி அரிசியை களைந்து ஊறவைக்கவும்.
குக்கரில் 3 டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
நன்கு கொதி வந்ததும் ஊறிய அரிசி மற்றும் பருப்பை சேர்த்து முன்று
விசில் விட்டு இரக்கவும். குக்கர் ஆவி அடங்கியதும், சிறிது நெய் விட்டு கிளறி இரக்கவும்.
கடைசியாக தாளிக்க கொடுத்துள்ளவைகலை சேர்த்து வெந்த பொங்கலில் சேர்த்து கிளறி இரக்கவும்.


இதில் இன்னும் இனிப்பு பொங்கல், அடை, கொழுக்கட்டை, ரொட்டி போன்றவை தயாரிக்கலாம். நோன்பு கஞ்சி செய்தவதில் அரிசிகூட இந்த குதிரை வாலியும் பாதிக்கு பாதி சேர்த்து செய்யலாம்.இல்லை கஞ்சியே இந்த தாணியத்தில் செய்யலாம். நான் செய்து பார்த்தேன் மிக அருமையாக இருந்தது. இதில் கிச்சிடி, முறுக்கு , சத்துமாவு, பாயசம் போன்றவை தயாரிக்கலாம்.
கவனிக்க: இந்த தாணியவகைகள் கிடைக்கும் இடம் சென்னையில் நீல்கிரீஸ் , ஒரு கிலோ 65 ரூபாய் என்று நினைக்கிறேன்.
ஆயத்த நேரம்: 10 நிமிடம் + ஊறவைக்கும் நேரம்
சமைக்கும் நேரம் : 10 நிமிடம்
பரிமாறும் அளவு - 3 நபர்களுக்கு
இது வீடியோவாக எடுத்ததால் போட்டோ எடுக்கல ஸ்கீர்ன் ஷாட் தான் போஸ்ட் பண்ணி இருக்கேன்.
Kuthirai vaali pongal/Breakfast Recipes/Millet recipes.
https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

0 கருத்துகள்:

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா